ரீ ரிலீஸ்
சமீபகாலமாக ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2001 ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படம் நேற்று அஜித் குமார் பிறந்த நாள் முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
அதை போல விஷ்ணுவர்தன் – அஜித் குமார் கம்போவில் வெளிவந்த பில்லா திரைப்படமும் நேற்று வெளியானது. தற்போது இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
முதல் நாள் வசூல்
இந்நிலையில் தீனா மற்றும் பில்லா என இரண்டு திரைப்படத்தையும் சேர்த்து ரூபாய் 1 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். ஆனால் விஜய்யின் கில்லி திரைப்படம் முதல் நாளே ரூபாய் 4 கோடி வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.