தென் பகுதிகளில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டுகளுக்கு காரணம் மகிந்த, ரணில், சஜித், நாமல் போன்றவர்களின் பாதாள உலக கோஸ்டிகள் தான் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இராணுவ முகாம்கள் அகற்றல்
மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண முன்னைய அரசாங்கம் உருவாக்கிய உள்ள பெரும்பாலான இராணுவ முகாம்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அகாற்றி வருகின்றோம். காரணம் வடக்கை பொறுத்தவரையில் எந்த பயங்கரவாத பிரச்சினைகள் இல்லை.

அந்த வகையில் நாங்கள் தேவையான இராணுவ முகாம்களை வைத்துக்கொண்டு மக்களின் இடங்களில் போக்குவரத்து பிரச்சினைக்குரிய இடங்கள் உள்ள வீதி பாதுகாப்பு காவலரன்கள் 30 வருடங்களாக இராணுவத்தினரிடம் இருந்து மக்களின் பாவனைக்கு திறந்து விடுகின்றோம்.
குந்தகம் விளைவிப்பு
மகிந்த ராஜபக்ச, ரணில், சஜித், நாமல் போன்றவர்கள் தென்பகுதியில் பாதாள உலக கோஸ்டிகளை உருவாக்கி நாட்டுக்குள் குந்தகம் விளைவித்து கொண்டுயிருக்கிறார்கள்.
அதன் விளைவாகதான் துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு அடிதடிகள் போன்ற இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

