ஜேர்மனியில்(germany) வேலை தேடிச் சென்ற இலங்கையர்(sri lanka) ஒருவர் மொழிப்பிரச்சனை மற்றும் தொழிற் பயிற்சியை எங்கு சென்று தேடுவது என தெரியாமல் தான் பட்ட அவதியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த Dulaj Madhushan (29)என்பவரே தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்தியவராவார்.இது தொடர்பில் அவர் விபரிக்கையில்,
ஒன்றித்து வாழ முயற்சி மொழி ஒரு தடை
ஜேர்மனியில் பணியாளர்களுக்கு தேவை உள்ளது, புலம்பெயர்ந்தோரும் ஜேர்மன் மக்களுடன் ஒன்றித்து வாழ முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அதற்கு மொழி ஒரு தடையாக உள்ளது.
இலங்கையில் பேருந்தை செலுத்த முறையாக பயிற்சி பெற்றவர் இவரால் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பேருந்தை செலுத்த முடியவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய குடிமகள் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, ஜேர்மனியில் 10 ஆண்டுகள்வரை வாழும் வகையில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார்.
ஆனாலும், அவரால் பெர்லினில் பேருந்து சாரதியாக பணியாற்றமுடியவில்லை.
சில மாதங்கள் கடும் மன அழுத்தம்
ஜேர்மனிக்கு வந்த முதல் சில மாதங்கள் கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக இவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்பயிற்சியையும் மொழிப்பயிற்சியையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளவேண்டிய நிலை அங்கு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எங்கு இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வதே பிரச்சினையாக இருக்கிறது.
அதாவது, BVG என்னும் பெர்லின் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று இந்த பயிற்சிகள் குறித்து விசாரித்தவேளை அங்கிருந்தவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசினாலும், அந்த விவரங்களை BVG வேலைவாய்ப்பு இணையதளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
மாற்றம் கண்ட வேலை
இணையதளத்தை பார்த்தால், அது முழுவதும் ஜேர்மன் மொழியில் இருந்திருக்கிறது. ஜேர்மன் மொழிதான் பிரச்சினையே என்றிருக்கும்போது, எப்படி அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை படிப்பது.
வெறுப்படைந்த மதுசன் அமேசான் பொருட்கள் பிரிக்கும் மையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். அதற்கு மொழித்தகுதி உட்பட எந்த தகுதியும் இல்லை.
ஆக, ஜேர்மனியில் வேலை வாய்ப்புகள் உள்ளது உண்மைதான். ஆனால், திறமையாக பணிகளைச் செய்ய தகுதி உடையவர்களாக இருந்தும், மொழிப்பிரச்சினை அதற்கு தடையாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/hnetHMS9etM