முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடுவானில் சிதறிய இரு விமானங்கள் – பயணிகள் அனைவரும் பலி – கருப்புப் பெட்டி மீட்பு

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான அமெரிக்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் ஆற்றில் இருந்து மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் விபத்தின் போது விமானிகள் பேசிக்கொண்ட பதிவுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருப்பு பெட்டி மூலம் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஒரு மாதத்துக்குள் முதல்கட்ட அறிக்கையை வெளியிடுவோம் என்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடுவானில் சிதறிய இரு விமானங்கள் - பயணிகள் அனைவரும் பலி - கருப்புப் பெட்டி மீட்பு | Black Boxes From Crashed Plane Recovered In Usa

மீட்புப் பணிகள் 

அமெரிக்க தலைநகா் வொஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த இராணுவ உலங்குவானூர்தி மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந்தனா்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் (American Airlines) ஒன்று அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) உலங்குவானுர்தி உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து புதன்கிழமை (30.1.2025) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் நிகழ்ந்ததாக விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 உடல்கள் மட்டும் மீட்பு

விமானமும் உலங்குவானூர்தியும் வெடித்து பல பாகங்களாக பொடோமேக் ஆற்றில் விழுந்ததை தொடர்ந்து புதன்கிழமை இரவு முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவசரகால மீட்புப் படை, காவல்துறையினர் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து நடந்து 24 மணிநேரம் கடந்துள்ள நிலையில், ஆற்றின் தட்பவெப்பம் 2 டிகிரி செல்சியஸாக இருப்பதால் இதுவரை 28 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

நடுவானில் சிதறிய இரு விமானங்கள் - பயணிகள் அனைவரும் பலி - கருப்புப் பெட்டி மீட்பு | Black Boxes From Crashed Plane Recovered In Usa

யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/xBMw1CDH-_0?start=7

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.