ஹமாஸ் அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் அபூ உபைதாவின் ஒரே மகனான நூர் அல்-ஜமாஸி இன்று (11.10.2025) காசாவில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ஹமாஸ் அமைப்பின் ஊடகப்பேச்சாளரான அபூ உபைதா மற்றும் அவரது கர்ப்பிணி மகள் இஸ்ரேலின் விமான குண்டு வீச்சில் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் படையினருடனான மோதலில் காயம்
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி பகலில், நெட்ஸரீம் பகுதியில் இஸ்ரேலிய படையினருடனான மோதலின்போது முஹம்மது தாவூத் அல்-ஜமாஸி காயமடைந்தார். இந்த மோதலில் இரண்டு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலை அடுத்து அப்பகுதியில் இஸ்ரேல் படையினர் தொடர் குண்டு வீச்சில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் நடத்தப்பட்ட தேடுதலில் அவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

