28 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒருவரின் உடல் பாகிஸ்தானில் உள்ள ஒரு பனிப்பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1997 ஜூன் மாதம் ஏற்பட்ட பனிச்சரிவின் போது அந்த நபர் ஒரு பள்ளத்தில் விழுந்து காணமாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டபோது அவர் தனது சகோதரருடன் அந்தப் பகுதியில் குதிரை சவாரி செய்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சேதமடையாமல் இருந்த உடல்
அப்போது விழுந்தவரை தேடுவதற்கான மீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று உயரிழந்தவரின் சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 28 ஆண்டுகளின் பின்னர் அவரின் உடலுக்கோ அல்லது ஆடைகளுக்கோ எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தவாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்லாமாபாத்தில் உள்ள காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஒரு உடல் பனிப்பாறையில் விழும்போது, கடுமையான குளிர் அதை விரைவாக உறைய வைத்து, சிதைவு செயல்முறையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.