உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் (Boeing fighter jet) ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், பயணிகள் விமானங்கள், போர் விமானங்கள் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றது.
அதன்படி அமெரிக்காவின் (USA) செயிண்ட் லுயிஸ், செயிண்ட் சார்லஸ், மிசோரிஸ், மஸ்கவுட், இலினொயிஸ் போன்ற பகுதிகளில் இந் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
சம்பள உயர்வு கோரிக்கை
இத் தொழிற்சாலைகளில் சுமார் மூவாயிரத்து இருநூறு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (04) முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் பணி நிறுத்தத்தின் காரணமாக போர் விமானங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.