முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க பாடசாலைகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட பரபரப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் புல்லர்டன் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பான சூழ்நிலையொன்று ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்போது, Sunny Hills High School, Fullerton Union High School, Troy High School மற்றும் Fern Drive Elementary School ஆகிய பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் “பள்ளி வளாகத்தில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன” என அறியாத நபர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் கண்காணிப்பு

குறித்த மிரட்டலுக்குப் பின்னர், மாணவர்கள் அவசரமாக பள்ளி கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பாடசாலைகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட பரபரப்பு | Bomb Threats At Four Schools In California

Image Credit: Mint

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளி வளாகங்கள் பூட்டப்பட்டு, யாரும் உள்ளே செல்லாத வகையில் அந்நாட்டு காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தி அனைத்து வகுப்பறைகள், அலுவலகங்கள் மற்றும் வளாகத்தின் முக்கிய பகுதிகளையும் ஒவ்வொன்றாக விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

ஆழமான விசாரணை 

நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, எவ்வித வெடிகுண்டும் இல்லை என்றும் இது ஒரு பொய்யான மிரட்டல் (hoax threat) என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பாடசாலைகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஏற்பட்ட பரபரப்பு | Bomb Threats At Four Schools In California

Image Credit: KTLA

மிரட்டலை விடுத்தது யார் என்பது இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினர் ஆழமான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக புல்லர்டன் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சமும் பதட்டமும் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்