மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களும் தற்போது சினிமாவின் ஹீரோயின்களாக நுழைந்து பிசியாக நடித்து வருகிறார்கள்.
மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். மறுபுறம் இளைய மகள் குஷி கபூர் தற்போது ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துவிட்டார், ஆனால் அது எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழில் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் குஷி கபூர் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது.
சுமார் 30 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் 7 கோடி மட்டுமே வசூலித்தது. அதனால் மிகப்பெரிய நஷ்டம் தயாரிப்பாளருக்கு வந்திருக்கிறது.
ஸ்ரீதேவி கடைசி படத்தின் இரண்டாம் பாகம்
இந்நிலையில் போனி கபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் ஸ்ரீதேவியின் கடைசி படமான MOM படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவதாக தெரிவித்து இருக்கிறார்.
அதில் மகள் குஷி கபூரை தான் நடிக்க வைக்க போகிறாராம். தனது இரண்டு மகள்களும் ஸ்ரீதேவியை போல டாப் ஹீரோயின்களாக வருவார்கள் என்றும் அவர் பேசி இருக்கிறார்.