பிரான்சில் (france)திருமண விருந்தில் நடந்த தாக்குதலில் மணமகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு பிரான்சின் அவிக்னான் நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மணமகள் திருமண விருந்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல்தாரியும் கொலை
கோல்ட் கிராமத்தில் நடந்த சம்பவத்தின் போது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேகத்திற்குரிய ஒருவரும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். மேலும் மணமகனும் 13 வயது சிறுவனும் பலத்த காயமடைந்தனர்.

பாரிய தேடுதல் வேட்டை
தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபர்களைத் பிடிப்பதற்காக டசின் கணக்கான காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு உலங்கு வானூர்தியையும் உள்ளடக்கிய ஒரு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

வன்முறை போதைப்பொருள் தொடர்பான மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

