முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முள்ளிவாய்க்கால் அநீதிக்கு நீதி தேடும் பயணம் தொடரும் : உமா குமரன் உறுதி

முள்ளிவாய்க்காலில் (Mullivaikkal) தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரிட்டனிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு எனர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ் சமூகம்

இது புதிய ஆரம்பங்கள் பிரதிபலிப்புகள் மற்றும் நம்பிக்கைகளிற்கான தருணம்.மேலும் இங்கிலாந்து முழுவதிலும் உள்ள தமிழ் சமூகத்திற்காக பரப்புரை செய்வதற்கான எனது அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஒரு தருணம்.

முள்ளிவாய்க்கால் அநீதிக்கு நீதி தேடும் பயணம் தொடரும் : உமா குமரன் உறுதி | British Mp Uma Kumaran On Mullivaikkal

தமிழ் பாரம்பரியத்தின் முதல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்,தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது.

எங்களது சமூகம் ஒரு பெருமை மிக்க சமூகம்,வலிமை மற்றும் மீள் எழுச்சியின் கதை.

பல குடும்பங்களை போல எனது பெற்றோர்கள் பாதுகாப்பை தேடி இலங்கையிலிருந்து தப்பிவெளியேறினார்கள்,வலிமை தியாகம் மற்றும் உறுதியுடன்,புதிய நாட்டில் வாழ்க்கையை உருவாக்கிய அவர்களின் கதை, பிரிட்டனின் கதையின் ஒரு பகுதியாகும்.

இன்று அவர்களின் மகளாக உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் நம்பிக்கையும் நான் நாடாளுமன்றத்தில் சுமக்கின்றேன்.

போர்குற்றச்சாட்டு

கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல் அரசாங்கத்தில் எங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் பாடுபட்டிருக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, இலங்கையில் போர்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக  பாயண தடைகளை விதிக்கவேண்டும் என நான் அழைப்பு விடுத்தேன்.

முள்ளிவாய்க்கால் அநீதிக்கு நீதி தேடும் பயணம் தொடரும் : உமா குமரன் உறுதி | British Mp Uma Kumaran On Mullivaikkal

அன்றிலிருந்து இந்த விடயம் தொடர்பில் செயற்படுவதை நான் நிறுத்தவில்லை. 15 துயரமான வருடங்களிற்கு பின்னர் தொழில்கட்சி இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு காரணமான இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது.இது நீதிக்கான நீண்டகாலமாக காத்திருந்த பல குடும்பங்களிற்கு மிக முக்கியமானதொரு தருணம்.

மாவீரர் தினம்

ஆனால் நீதி என்பது ஒரு முறை மாத்திரம் நடக்கும் நிகழ்வல்ல,நாம் தொடர்ந்து செயற்படவேண்டும்,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நான் அழைப்பு விடுத்துள்ளேன்.

முள்ளிவாய்க்கால் அநீதிக்கு நீதி தேடும் பயணம் தொடரும் : உமா குமரன் உறுதி | British Mp Uma Kumaran On Mullivaikkal

மாவீரர் தினத்தன்று வெளிவிவகார குழுவின் அமர்வில் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுசென்றேன்.நீதி உண்மை பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நான் உறுதியாக நம்புவதனால் நான் இதனை செய்தேன்.

இவை அருவமான கொள்கைகள் இல்லை,தமிழ் குடும்பங்களை பொறுத்தவரை இவை ஆழமானவை தனிப்பட்டவை.

மே 2009 கொடுரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம், மருத்துவமனைகள் மீது எறிகணை தாக்குதல்கள், பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டவைகள் .காணமல்போன ஆயிரக்கணக்கானோர்.

மனித குலத்தின் மிகமோசமானவற்றை எதிர்கொண்டு தப்பிய தலைமுறை இன்னமும் சுமக்கும் அதிர்ச்சிகள் காயங்கள். நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.

you may like this

https://www.youtube.com/embed/ZSdXXYatkWE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.