பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி காசா பகுதியில் மோதலை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பேன் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer) எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பேன்
காசா பகுதிக்கு உதவி விநியோகங்களை மீண்டும் தொடங்க ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டார்.
இது செய்யப்படாவிட்டால், செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கூறினார்.
பிரிட்டனின் அறிவிப்பிற்கு இஸ்ரேல் கண்டனம்
இதேவேளை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பிரிட்டனின் முடிவுக்கு நெதன்யாகு (benjamin netanyahu)கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
‘ பிரிட்டனின் இந்த முடிவு பிற்காலத்தில் அவர்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது.” – என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.