முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம்

Courtesy: Aadhithya

நுவரெலியா – கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா – ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நாவலர்புற லயன் குடியிருப்புகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மிகவும் அச்சத்துடன் வாழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த லயன் குடியிருப்பு 16 லயன் அறைகளை கொண்டுள்ளது. அவ்வனைத்து வீடுகளிலும் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

50க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வாழும் இவ்விடத்தில் வீட்டின் முன்புறம், உட்புறம் என பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பலமுறை தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தும் எவ்வித பதிலும், பலனும் கிட்டவில்லை.

அடிக்கல் நாட்டல் 

மேலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வீடுகள் ஹெரோ பகுதிக்கு வருவதாக கூறினர் பொய்யாகி போனது, பின்னர் கோட்டாபய ஆட்சியின் போதும் கனவாகியது.

கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம் | Broken House Issue In Kotmale Hero Estate

பின்னர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்தில் இ.தொ.காவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், ஹெரோ தோட்டத்தின் அண்டைய தோட்டமான பேர்லன்ஸ் தோட்டத்திற்கு நாட்டப்பட்டுள்ளது. 

அப்போதும் எங்கள் பகுதிக்கு வீடுகள் தருவதற்கு முன்வரவில்லை. ஆனால் தேர்தல் காலங்களில் வாக்குகளை பெறுவதற்கு எங்களின் வெடிப்புக்குள்ளான குடியிருப்பை இல்லாதொழித்து புதிய தனி வீடுகளை கட்டி தருவதாக கூறியே வாக்குகளை கேட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரிய மண்சரிவு 

மேலும், இது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், “வீடுகள் விரிசல் விடுவது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஏனென்றால் ஒரு ஐந்தாறு வருடத்திற்கு முன்பு இந்த லயன் குடியிருப்புக்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டது.

இதன் அருகிலுள்ள பகுதிகளும் எதிர்காலத்தில் மண்சரிவு ஏற்படுமென அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிலவேளை, அதற்கான அறிகுறியாக இருக்குமோ என சந்தேகம் எழுகின்றது.

கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம் | Broken House Issue In Kotmale Hero Estate

மழைக்காலங்களில் பெரும்பாலும் அச்சத்துடனேயே இருக்கின்றோம். நிம்மதியாக உறங்கி எழுவதை கூட பயத்துடனே மேற்கொள்கின்றோம். எங்களுக்கு வேறு வீடு கட்டி செல்வதற்கான வசதி கிடையாது.

வறுமான பிரச்சினை பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினையில் வீடுகளை கட்டுவதற்கு பணப்பிரச்சினை கிடையாது. அதே சந்தர்ப்பத்தில் வீட்டு கடன் வாங்கி கட்டுவதற்கும் வாய்ப்பில்லாத நிலை காணப்படுகின்றது.

கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம் | Broken House Issue In Kotmale Hero Estate

பெரும்பாலும் தேயிலையில் வரும் வருமானத்தை நம்பியே இருக்கும் நிலையில் அதில் வரும் வருமானத்தை கொண்டு பிள்ளைகளை படிக்க வைப்பதா, வீட்டு செலவு பொருட்களை வாங்குவதா, இல்லை இலட்ச கணக்கில் செலவு செய்து வீடு கட்டுவதா என ஒன்றும் விளங்கவில்லை.

எனவே, ஏதாவது பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் எங்களை அவலங்களை பார்த்து வீடுகளை கட்டுவதற்கு ஏதாவது ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மலையக தலைமைகள் சரி தற்போதைய ஜனாதிபதி சரி முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.