பொலிவியாவின் (Bolivia) உயுனி நகரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்றைய தினம் (01.03.2025) இடம்பெற்றுள்ளது.
இரண்டு பயணிகள் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றான ஒருரோ கொண்டாட்டம் நடைபெறும் மேற்கு நகரமான ஒருரோவிற்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளகியுள்ளது.
இந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/WV7pRoeH9C0