கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (04) அதிகாலைவேளை வந்திறங்கிய இளம் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு(colombo) தெமடகொடவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.
ரூ.39.3 மில்லியன் மதிப்புள்ள 262 எலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (e-cigarettes)நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக தெரிவித்தே இவர் கைது செய்யப்பட்டார்.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வருகை
இன்று அதிகாலை 2.35 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH 179 இல் இவர் வந்துள்ளார்.
இதன்போது காவல்துறை அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனையிட்டபோது 12,000 262 இ-சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார், பெப்ரவரி 7 ஆம் திகதி நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.