பிரதமர் ஹரிணியின் சிச்சியின் செய்மதி தொடர்பிலான சம்பவம் நாடகமாகவும் இருக்கலாம், இவற்றை பார்த்து நாம் கைதட்டி கொண்டிருக்காமல், எதிராக செயற்பாடுகளில் ஈடுபடுவதே சிறந்த செயற்பாடாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(13) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
தொடர்ந்து பேசிய அவர்,
“அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மலைபோல் குவிந்துள்ளது.எதிர்பார்ப்புக்கள் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறலாம்.
தேசிய மக்கள் சக்தி என்பது இரு கட்சிகளின் இணைப்பாகும்.தேசிய மக்கள் சக்தி போராசிரியர்கள் மற்றும் கல்விமான்களின் நிறைந்ததாகும்.
பிரதமரின் ஹரிணியின் செயற்பாடுகள்
ஜே.பி.வி.யினர் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை கொண்ட கட்சியாகும்.இரு கோணங்களில் இருப்பவர்களை சேர்த்து பார்க்க முடியாது என நினைக்கிறேன்.
பிரதமரின் ஹரிணியின் செயற்பாடுகள் நீதியான கௌரமான செயற்பாடுகளாகும் ஆனால் ஜே.வி.பினரின் செயற்பாடுகளை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம்.இவை இந்த காலத்திற்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.