முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்லோரும் சமம் என்றால் அது ஆபத்து! ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்னேஸ்வரன் போர்க்கொடி

எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் நேற்று (18.10.2024) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக அந்தக் காலத்தில் இருந்து ஜே.வி.பியினர்
செயற்பட்டனர். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான
கொள்கையுடன் அவர்கள் வாக்குக் கேட்டனர்.

தமிழர்களுக்கு எதிரான கருத்து 

இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும்
தமது நிலைப்பாட்டையா ரில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த ஜே.வி.பியினர்
முயல்கின்றனர்?

எல்லோரும் சமம் என்றால் அது ஆபத்து! ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்னேஸ்வரன் போர்க்கொடி | C V Vigneshwaran Opposes Jvp S Stand

ஆனாலும், அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லை என்றவாறாகக்
கூறியிருக்கின்றார்.

இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களைக்
கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகின்றது
போல் உள்ளது.

எல்லோரும் சமம்

இந்த 13ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர
தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13ஐயும் நாங்கள்
பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால்
அது மிகப் பெரிய ஆபத்தாகும்.

எல்லோரும் சமம் என்றால் அது ஆபத்து! ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்னேஸ்வரன் போர்க்கொடி | C V Vigneshwaran Opposes Jvp S Stand

ஏனெனில் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள். அவர்களுடைய
வாழ்க்கை முறையும் மொழியும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்கக்
கூடியதாகத்தான் அமையும்.

ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். ரில்வின் சில்வா
போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாகக் கூறுகின்றோம்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்