இலங்கை (Sri Lanka) – மலேசியா (Malaysia) சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான மேலதிக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளப் பெறுவதற்காக, ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
இதற்கு, வலுவான மற்றும் மூலோபாய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது இலங்கைக்கு இன்றியமையாதது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
58.3 மில்லியன் அமெரிக்க டொலர்
அத்துடன் ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கிய அங்கத்துவ நாடான மலேசியா இலங்கையின் 34வது ஏற்றுமதி இலக்காகும்.
மேலும் 2013 இல் மொத்த ஏற்றுமதியின் பெறுமதி 58.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதன்படி இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அதிபர் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.