முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (ADB) கடன் தொகையை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் (Sri Lanka Cabinet) வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதிகள் 02 இனை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் 02 உபவேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை

அதன் முதலாவது வேலைத்திட்டமான நீர்வழங்கல் நடவடிக்கைகளில் காலநிலை தாங்குதிறன், அனைத்து தரப்பினர்களையும் உள்வாங்கல், சுற்றாடல் பேண்தகு நிலைமையை வலுப்படுத்தல் என்பவற்றுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் | Cabinet Approves Loan From Asian Development Bank

அதற்கமைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டம், மகாவலி நீர்ப்பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் என்பவற்றிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்