தமிழ் மக்களிற்கான தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் (Ariyanethiran) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போத அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரியநேத்திரன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “தமிழருக்கான முழுமையான சுதந்திரமே தமது பிரதான நோக்கம்.
சமத்துவ அரசாங்கம்
தமிழருக்கான தனி நாடொன்று உருவாக்குவது நோக்கமாக இருந்திருந்தால், தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன்.
அத்துடன், தாம் சமத்துவ அரசாங்கத்தை விரும்புவதாகவும், கனடா (Canada) மற்றும் சுவீடன் (Sweden), ஸ்கொட்லாந்து (Scotland) போன்ற நாடுகளில் காணப்படுவதை போன்ற சமத்துவ அரசாங்கத்தை உருவாக்குவதே தமது நோக்கம்.
குறிப்பாக, “மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரசார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள் அத்தோடு தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அத்தோடு, ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களிற்கான கொள்கைகள் திட்டங்கள் குறித்து வினவப்பட்ட போது, “வடக்கு மக்களிற்காக மாத்திரமல்ல கிழக்கு மக்களிற்காகவும் அங்கு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் (Sri Lanka) தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர் அத்தோடு வாழ்வாதாரம் பிரஜாவுரிமைகளை பெற முடியாதவாறு நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயுள்ளன.
தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்காகவும் அதனை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவுமே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் இதனையே தெரிவிக்கின்றோம் அத்தோடு இந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.
இனபிரச்சினைக்கு தீர்வை காணமுடிந்தால் பொருளாதார பிரச்சினை தானாக முடிவிற்கு வந்துவிடும் இதுவே எனது நோக்கம்” என அவர் பதிலளித்துள்ளார்.