கனடாவின் (Canada) துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, பதவியை விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விடயத்தை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
கனடாவின் வளர்ச்சி
இதேவேளை, இந்த கடிதத்தில் கனடாவின் வளர்ச்சிப் பாதையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசில் உயர்நிலை பொருளாதார ஆலோசகராக இருப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கடந்த வாரம் தெரிவித்திருந்ததோடு, தனது பதவியை விட்டு விலகுவதாகவும் கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.