முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா விசா பெற்றுள்ளவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு(IRCC), விசா மற்றும் தற்காலிக குடியேற்ற ஆவணங்களுக்கான (Temporary Resident Visa, eTA, Work Permit, Study Permit) புதிய ரத்து விதிகள் மற்றும் வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது. 

இவ்விதிகள், கனடாவுக்கான பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர் அனுமதி பெற்றவர்களுக்கு முக்கியமான மாற்றங்களை கொண்டுள்ளன.

புதிய வழிகாட்டியின் படி, தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தற்காலிக குடியேற்ற ஆவணங்களை பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா ரத்து 

அவற்றில் முக்கியமானவை நிர்வாகப் பிழைகள், தகுதி அல்லது அனுமதி நிபந்தனைகள் பூர்த்தியாவதில்லை என்ற நிலைகள், அல்லது விண்ணப்பத்தின் போது வழங்கப்பட்ட தகவல்கள் தவறானதாக இருப்பது ஆகியவை அடங்கும். 

கனடா விசா பெற்றுள்ளவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! | Canada Work Study Permit Visa Policy Change

அத்தோடு, விண்ணப்பதாரருக்கு பின்னர் வழங்கப்பட்ட பிற அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தாலோ, பாதுகாப்பு அல்லது போலி ஆவணங்கள் தொடர்பான சந்தேகங்கள் எழுந்தாலோ, அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் எனவும் IRCC தெரிவித்துள்ளது.

இதேவேளை, விண்ணப்பதாரர் நிரந்தர குடிமகனாகி விட்டால், கடச்சீட்டை இழந்தோ அல்லது ரத்துசெய்யப்பட்டாலோ, அல்லது விண்ணப்பதாரர் இறந்துவிட்டாலோ, வழங்கப்பட்ட விசா தானாகவே செல்லாததாகி விடும். 

இதே விதிகள் eTA (Electronic Travel Authorization), வேலை அனுமதி (Work Permit), மற்றும் படிப்பு அனுமதி (Study Permit) ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

விண்ணப்பதாரர்களின் தகவல்கள் 

இந்த மாற்றங்கள், கனடாவுக்கான பயணம், வேலை அல்லது படிப்பிற்காக அனுமதி பெற்றவர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டவை. 

கனடா விசா பெற்றுள்ளவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! | Canada Work Study Permit Visa Policy Change

ஒரு முறை விசா அல்லது அனுமதி வழங்கப்பட்ட பிறகும், விண்ணப்பதாரரின் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால், உதாரணமாக வேலை இழப்பது, சட்டபூர்வமற்ற நிலைக்கு வருவது, அல்லது தவறான தகவல் வழங்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் அந்த ஆவணங்கள் ரத்து செய்யப்படலாம்.

எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் தகவல்களை சரியாகவும் தற்போதைய நிலைக்கு ஏற்பவும் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என IRCC எச்சரித்துள்ளது.

IRCC மேலும், விசா வழங்கப்பட்ட பிறகு உங்கள் நிலைமையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

உண்மையான தகவல்கள்

குறிப்பாக, வேலை, படிப்பு, குடியேற்ற நிலை போன்றவை மாறியிருந்தால் அதுவும் ஆவண ரத்து செய்யும் காரணமாக இருக்கலாம். எனவே விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களையும் தகவல்களையும் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

கனடா விசா பெற்றுள்ளவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! | Canada Work Study Permit Visa Policy Change

இந்த புதிய விதிகள், கனடாவுக்குச் செல்லும் முன் மற்றும் பிறகு தங்கள் குடியேற்ற ஆவணங்களை கவனமாக பராமரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.

தவறான தகவல் அல்லது புதுப்பிக்கப்படாத நிலை காரணமாக விசா ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில் முழுமையான உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.