கனடாவின்(canada) புதிய பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி(mark carney) அருகிலுள்ள அமெரிக்காவிற்கு(us)தனது முதலாவது பயணத்தை மேற்கொள்ளாமல் முதலாவது சர்வதேச பயணமாக அடுத்த வாரம், பிரித்தானியாவுக்கும்(uk) பிரான்ஸுக்கும் (france)விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் அவர் தனது பதவியேற்பின் பின்னரான முதலாவது உரையில் அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் கனடா இருக்கப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக நேற்று(14) பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்
‘மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமது அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
https://www.youtube.com/embed/0lsToUs_RD0