மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் உள்ள கனடா (Canada) குடியுரிமையாளர்களை சிறப்பு விமானங்களில் விரைவில் பாதுகாப்பாக நாடு திரும்புமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கேட்டுக்கொண்டுள்ளார்.
லெபனானில் (Lebanon) ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
எனினும், லெபனானில் இன்னும் 6,000 பேர் காத்திருப்பதாகவும், வார இறுதியில் மேலும் 2,500 பேரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் ட்ரூடோவின் அலுவலகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கனேடிய மக்கள்
எனவே இன்றும் (6), நாளையும் (7) சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் கனடா விமானங்களில் பயண ஆசனங்கள் மீதமிருப்பதால், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கும் கனடா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல்(Israel), லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் மீண்டும் தீவிரமாக மோதல்களை நடத்தி வருகிறது, இதனால் பாதுகாப்பு சூழல் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.