கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் (Canada) வசித்து வரும் 59 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி பாண் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில்
சென்ற போது வீதியால் சென்ற பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா
மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.
You may like this
https://www.youtube.com/embed/aRLF7f9aWwc

