முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ள செலவுக்கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தமது செலவுக்கணக்குகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியல் இன்று பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு இன்று (28) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 உரிய சட்ட நடவடிக்கை

அதன் பின்னர் குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

local government election money

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் 2025.05.06 ஆம் திகதியன்று நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் செலவுக் கணக்கை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் குறித்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கமைய விபரத்திரட்டை சமர்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் செவ்வாய்க்கிழமை (27) நிறைவடைந்தது.

தேர்தல் செலவினங்கள்

தேர்தல் செலவினங்களை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்பதை ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ள செலவுக்கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் | Candidates Who Didn T Submit Expenses

ஆகவே குறித்த காலப்பகுதிக்குள் செலவின விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்களது விபரங்களை பொலிஸ்மா அதிபரிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்படவுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.