விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த், கேப்டனாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழ்பவர்.
சினிமாவில் எப்படி மக்களை கவர்ந்தாரோ அதே அளவிற்கு அரசியல் வந்தும் தனக்கென ஒரு தடம் பிடித்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை, ஒரு கட்டத்தில் வீட்டிலேயே முடங்கினார்.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.
ரீ-ரிலீஸ்
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக அமைந்த படம் கேப்டன் பிரபாகரன்.
6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
1991ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தில் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் படத்தை 4K தரத்தில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
அதேபோல் 2000ம் ஆண்டில் என்.மகாராஜன் இயக்கத்தில் வெளியான வல்லரசு திரைப்படத்தை படக்குழு ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.