முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கான மின் இணைப்புகள் இன்று பிற்பகல் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ள சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த வசதிகளை அகற்றும் அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் கம்பிகள் அகற்றப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் நடவடிக்கை
இலங்கை மின்சார சபையின் வலஸ்முல்ல பிராந்திய அலுவலக அதிகாரி இதனைதெரிவித்துள்ளார்.
குறித்த தோட்டத்தில் 03 மின்கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.