முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுதத்த திலகசிறிக்கு எதிராக வழக்கு! நீதிமன்றை நாடவுள்ள சட்டத்தரணிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே வெளியிட்ட யூடியூப்பர் சுதத்த திலகசிறிக்கு (Sudaththa Thilaksiri) எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

நீதிமன்றத் தீர்ப்பு

இதையடுத்து, தற்போது அவர் விசாரணைகளின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுதத்த திலகசிறிக்கு எதிராக வழக்கு! நீதிமன்றை நாடவுள்ள சட்டத்தரணிகள் | Case Be Filed Against Youtuber Sudath Thilakasiri

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் முன்னிலையாவதற்கு முன்னரே அவர் கைது செய்யப்படுவது குறித்தும் விளக்கமறியலுக்கு அனுப்பப்படுவது குறித்தும் யூடியூப்பர் சுதத்த திலகசிறி செய்தி வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில், நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு மட்டும் முற்கூட்டியே எப்படித் தெரிய வந்தது என சட்டத்தரணிகள் குழுவொன்று, கேள்வியெழுப்பியுள்ளது.

வழக்கு தாக்கல்

அத்தோடு, குறித்த விவகாரம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு ஒப்பானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுதத்த திலகசிறிக்கு எதிராக வழக்கு! நீதிமன்றை நாடவுள்ள சட்டத்தரணிகள் | Case Be Filed Against Youtuber Sudath Thilakasiri

ஆகையினால் குறித்த குற்றச்சாட்டின் கீழ் சுதத்த திலகசிறிக்கு எதிராக வழககொன்றைத் தாக்கல் செய்ய அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை (25) குறித்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்