சில்க் ஸ்மிதா
காந்த கண்ணழகி, திராவிட பேரழகி, கனவுக்கன்னி என பல பெயர்களை கொண்டு ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா.
வினு சக்கரவர்த்தியின் கண்ணில் பட சினிமாவில் மளமளவென படங்கள் பெற்று டாப் நாயகியாக வலம் வந்தார். ஒருகாலத்தில் இவரது கால்ஷீட் கிடைத்தால் போதும் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போது உள்ள தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக இருந்தது.
சில்க் ஸ்மிதா தமிழை தாண்டி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
திருமணம்
பிரபல நடன அமைப்பாளர் புலியூர் சரோஜா ஒரு பேட்டியில் பேசும்போது, ஒருமுறை நான் திருப்பதி செல்வதற்கு 2 நாட்கள் முன்பு ஒரு நகை பாக்ஸை கொண்டுவந்து காண்பித்து நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன் என சொன்னார்.
காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ
அவரிடம் ராதாகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்தார். அவரது மகனுக்கும் எனக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக சொல்லி அந்த பையனின் பெயரைத்தான் என்னுடைய காதில் சில்க் ஸ்மிதா கூறினார் என்றார்.