தேசிய பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன், தனது பதவி விலகலுக்கான கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எம்.சகாதேவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பதவிக்கு நியமிக்கப்பட்ட சில மாதங்களுக்காக தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனிப்பட்ட காரணங்கள்
அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிடம் அவர் தனது பதவி விலகலுக்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.