முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவால் காப்பாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் : சாமர சம்பத் பகிரங்கம்

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தொலைத்தொடர்பு தபால் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பதுளையில் வைத்து அவரை கொலை செய்ய விடுதலைப் புலிகள் முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் அதில் தப்பித்து, மூன்று நாட்களின் பின்னர் மாத்தறை அக்குறஸ்சையில் இடம்பெற்ற மீலாதுன் நபி தின வைபவமொன்றின் போது மாத்தறை கொடபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானார் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய தகவலின் படியே அன்று அவர் உயிர் தப்பினார் என்றும் குறிப்பிட்டார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி நிகழ்ச்சியிலேயே அவர் இந்த உண்மைகளை அவிழ்த்துள்ளார்.

தற்கொலை தாக்குதல்

இந்த விடயம்  தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேமோதரவில் புதிதாக தபால் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அன்றிருந்த தபால் துறை அமைச்சரான மகிந்த விஜேசேகர பதுளைக்கு வருகை தந்திருந்தார்.குறித்த நிகழ்வை நானே ஏற்பாடு செய்திருந்தேன்.

மகிந்தவால் காப்பாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் : சாமர சம்பத் பகிரங்கம் | Chamara Sampath Ltte Terrorist Claymore Bomb

அன்று 12 மணியளவில் எல்ல விடுதியில் அவரை தங்க வைத்தேன்.முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை அலுவலகத்தில் இருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் நிமல் சிறிபால டி சில்வா 1 மணி போல் என்னை அழைத்து அலுவலகத்திற்கு வர சொன்னார்.

நான் அங்கு போனேன், விடுதலைப் புலிகள் பதுளைக்கு வந்திருப்பதாகவும் இருவரின் உயிருக்கும் ஆபத்து என மகிந்த தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அப்போது முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர விடுதியில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும், நிமல் சிறிபால டி சில்வாவை அலுவலகத்திலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு

நிமல் சிறிபால டி சில்வா என்னிடம், சாமர தபால் மா அதிபர் திசாநாயக்க வருவார் நீர் சென்று அடிக்கல்லை நாட்டுமாறு தெரிவித்தார்.நான் திருமணம் முடித்து ஒரு வருடம் மனைவியும் கர்ப்பிணியாக இருந்தார்.

மகிந்தவால் காப்பாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் : சாமர சம்பத் பகிரங்கம் | Chamara Sampath Ltte Terrorist Claymore Bomb

பின்னர் நான் சென்று நிகழ்வை நடத்தி முடித்தேன்.
அதற்கு பின்னர் மூன்று நாட்களின் பின்னரே அவர் தற்கொலை குண்டு தாக்குலில் சிக்கினார்.இதெல்லாம் உண்மையான சம்பவங்கள்.அவ்வாறான சூழநிலையில் தான் நாட்டில் வேலை செய்தோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அப்படியொரு சூழ்நிலை இல்லை.
அவ்வாறே முன்னாள் அமைச்சர் டி.எம்.தசநாயக்கவுக்கு வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளைக்கு வைக்கப்பட்டதாகும்.

அவர் வாகனத்தின் முகப்பு ஒளியை ஒளிரவிட்டு வந்ததை கண்டு கிளைமோரை வெடிக்க வைத்ததாக டி.எம்.தசநாயக்க கொலைகுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சிறைக்கைதி துமிந்த திசாநாயக்கவுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வாறான பயங்கர சம்பவங்கள் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என்றும“ குறிப்பி்ட்டுள்ளார்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.