தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது, பெரிய அளவில் வெற்றிப்பெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க படம் திரைக்கதையில் சொதப்ப படு நஷ்டத்தை சந்தித்தது.
அண்மையில் நடிகர் சூர்யா, தனது சொந்த செலவில் அகரம் பவுன்டேஷனின் புதிய அலுவலகத்தை திறந்தார், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.
புதிய படம்
கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி படத்தை தொடர்ந்து சூர்யா படம் குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இந்த நடிகை கேமியோ ரோலில் நடிக்கிறாரா?
கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கத்தில் அண்மையில் தண்டேல் திரைப்படம் வெளியாக செம வசூல் வேட்டை நடத்தியது.
சந்து மொண்டேட்டி அண்மையில் சூர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளாராம். இந்த கதை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை தாண்டி பெரிய அளவில் இருக்கும், எனக்கு இந்த கதை மீது பெரிய நம்பிக்கை உள்ளது.
சூர்யா போன்ற நடிகர்கள் தான் இந்த கதையை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார்கள் என கூறியுள்ளார்.