முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
அத்தோடு, இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு சமம் என்றும், அதன் தாக்கங்கள் ஒரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கு அப்பால் நீண்டுள்ளது என்றும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக உரிமைகளுக்கு பாதிப்பு
இது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், அனைத்து அரசியல் தலைவர்களும் அத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது மற்றும் சிறைத்தண்டனையை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது தலதா அதுகோரல தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
you may like this…!
https://www.youtube.com/embed/AQllEPTtMMA

