எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கை சுகாதார அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் படி, சுகாதார அமைச்சர் பதவி உள்ளிட்ட சுகாதாரத்துறைசார் உயர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சுகாதார அமைச்சர் பொறுப்பு ராஜித சேனாரட்னவிடம் (Rajitha Senaratne) வழங்கப்படும் எனவும், தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண (Ramesh Patrana) பதவி விலகுவார் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பதவி நிலைகளில் மாற்றம்
அத்துடன், ராஜித சேனாரட்ன இந்த மாத இறுதியில் ரணிலுடன் நிச்சயமாக இணைந்து கொள்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தகுதி இருந்தும் பழிவாங்கல்களினால் சில உயர் அதிகாரிகளுக்கு பதவி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு உள்ளிட்ட சில பதவி நிலைகளில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.