கனடாவில் (Canada) வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனேடிய உணவு வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, 25 வீதமான கனேடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணிகள்
இந்த நிலையில், போக்குவரத்து, பாதணிகள், புரதச்சத்து, விசேட வைபவங்கள், பரிசு பொருட்கள், ஆடைகள், பற்சுகாதாரம், எதிர்பாராத செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களின் வறுமை நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான காரணிகளின் அடிப்படையில் கனடாவில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மேலும் ஆறு மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் வறுமை நிலைமை
இதன்போது, வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வறுமை நிலையை தீர்மானிக்காது மக்களின் கொள்வனவு இயலுமை அடிப்படையில் வறுமை குறித்த தகவல்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,18 முதல் 30 வயதானவர்களில் 30 வீதமானவர்களும் ஒற்றை பெற்றோரைக் கொண்ட குடும்பங்களில் 45 வீதமான குடும்பங்களும், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் 42 வீதமானவர்களும் வறுமையில் வாடுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.