ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இனவாதமற்ற நாடாகவும் இலஞ்ச ஊழலற்ற நாடாகவும் இலங்கை மாறுவதற்கு தனது உறுதி மொழியை தொடர்ச்சியாக நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், “நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து உரையாடிய போது இனவாதமற்ற
இலங்கையையும், இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையை தான் உருவாக்குவதற்காக பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார்.
பல்வேறு பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடந்து
முடிந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி மன்னார் மாவட்டத்தில் இருந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வை முன்
வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,