வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம
ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக
ஆரம்பமாகியுள்ளது.
ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ
செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
திருக்கொடியேற்றம்
விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகிய கிரியை நிகழ்வுகளை தொடர்ந்து, யாக பூஜை
இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் கொடித்தம்பத்திற்கு
முன் எழுந்தருளியுள்ளதுடன் திருக்கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

அரோகரா கோஷங்கள் முழங்க வேதபாரயணங்கள் ஒலிக்க, வெகுமிர்சையாக பல்லாயிரக்கணக்கான
பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றுள்ளது.
இந்த கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலயம் பிரதம குரு சிவ ஸ்ரீலஸ்ரீ நவரத்தின
முரசொலிமாறன் தலைமையிலான குருமார் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி முத்துரசப்புரத்
திருவிழாவும், திருவேட்டைத் திருவிழாவும் இடமபெற்று 18 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சித்திரதேராட்டமும் , 19 ஆம் திகதி
திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்துடன் கூடிய பூரணையில்
சமுத்திராதீர்த்தோற்சவத்துடன் விழா இனிதே நிறைவு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.



