யாழ். அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றுடன் மொத்தமாக
33 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்று (30.06.2025) சிறுவர்களின் இரண்டு எலும்புக்குடுகள் புதைகுழியில் இருந்து
மீட்கப்பட்டுள்ளன.
புதிய எலும்புக்கூடுகள்
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளை வெளியே
மீட்டெடுப்பதல் பாரிய சிக்கலை மீட்ப்புக் குழு எதிர்கொண்டுள்ளதாக
பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி ரணித்தா.ஞா
தெரிவித்துள்ளார்.

குறித்த என்புத் தொகுதி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால்
எலும்புக்கூடுகளை வெளியே பிரித்தெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக புதிதாக எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இன்று
மேற்கொள்ளப்படவில்லை.

