மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களில் 9 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் நோக்கில் தமிழரசுக் கட்சியின் பரப்புரைக் கூட்டங்கள் இம்முறை ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் நேற்றைய தினம் (11.04.2025) செங்கலடி ஐயங்கேணி கிராமத்தில் நடைபெற்றது.
வேட்பாளர் அறிமுக நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தமிழரசுக் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் செங்கலடி ஐயங்கேணி கிராமத்தில் உள்ள மக்கள் இம்முறை தமிழரசுக் கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பளித்ததோடு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று ஆறாம் வட்டார வேட்பாளர் செ.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), ஞா.சிறிநேசன் (G.Srinesan), வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




