பாகிஸ்தான் (Pakistan) நாட்டில் தயாரான பாகிஸ்தானுக்கு சொந்தமான எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO-1) என்ற செயற்கைக்கோளை சீனா (China) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செயற்கைகோளுக்கு PRSC-EO-1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள், சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவும் மையத்தில் இருந்து செலுத்தப்பட்டு விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் செயற்கைக்கோள்
இந்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள் குறித்து முன்னதாகவே அறிந்து கொள்வதற்கும், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் விவசாய மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today marks another milestone in Pakistan’s space journey and 🇵🇰🇨🇳space collaboration to advance socio-economic development. Thanks to leadership and professional acumen of SUPARCO @NSAPAKISTAN, PRSC-EO-1 satellite was successfully launched from Jiuquan in northwestern China… pic.twitter.com/eIHRcPPUy1
— Khalil Hashmi (@KhalilHashmi) January 17, 2025
அத்தோடு, அமெரிக்காவின் (USA) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினுடைய ஸ்டார்ஷிப் ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.
இந்தநிலையில், ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் (gulf of) மெக்சிக்கோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.