அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ட்ரம்ப் இந்த வரி குறைப்பின் மூலம் இலங்கையில் அமெரிக்காவின் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கான சலுகைகளை எதிர்பார்க்கலாம் என சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சங்கத் தலைவர் தம்மிக்க பெர்னாந்து குறிப்பிட்டிருந்தார்.
இந்த வரி குறைப்பு நாட்டின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாவதோடு ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் சீனா தனது அனைத்து செயற்றிட்டங்களையும் இலங்கையில் நிறுத்தி வைத்துள்ளது.
இவ்வாறாக இலங்கையுடனான செயற்பாடுகளை நிறுத்தும் போது அமெரிக்காவிடம் சரணடைவதை விட வேறு வழி இல்லை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்….