அணு ஆயுதங்கள் மற்றும் இராணுவ செலவினங்களைக் குறைப்பதில் அமெரிக்கா(us) முன்னணியில் இருக்க வேண்டும் என்று சீனா(china) தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து சீனா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தையின் போது அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட்டுகளை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று முன்மொழிவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) சமீபத்தில் அறிவித்தார்.
இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாட்டை சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு கியான் தெளிவுபடுத்தினார்.
பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்
உலகின் மிகப்பெரிய அணு ஆயுத கிடங்கைக் கொண்ட நாடான அமெரிக்கா, முதலில் அணுசக்தியைக் குறைப்பதற்கும் அதன் அணு ஆயுதக் கிடங்கைக் கணிசமாகக் குறைப்பதற்கும் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் அதிகரித்த செலவு
அமெரிக்காவின் இராணுவச் செலவு நீண்ட காலமாக உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவிற்குப் பிறகு எட்டு நாடுகளின் மொத்த இராணுவச் செலவை விட அந்தச் செலவு அதிகமாகும்.
எனவே, அணு ஆயுதங்கள் மற்றும் இராணுவ செலவினங்களைக் குறைப்பதில் அமெரிக்காவும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று வூ கியான் சுட்டிக்காட்டினார்.