இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (9) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
சீனாவின் உதவிகள்
குறித்த சந்திப்பில் சீனா நாட்டினால் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட
வலைகள் மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வடக்கு கடற்றொழில் சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற
கோரிக்கையையும் கடற்றொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.