சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இன்று வரை முன்னணி நட்சத்திரமாக தனது மார்க்கெட்டை இழக்காமல் இருக்கிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக விஸ்வம்பரா எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் மல்லித் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார்.
இன்று நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
8 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மொத்த சொத்து
இந்த நிலையில், தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,650 கோடி ஆகும்.
ஹைதராபாத்தில் சிரஞ்சீவிக்கு சொந்தமாக பங்களா உள்ளது. இந்த பிரம்மாண்ட பங்களாவின் மதிப்பு ரூ. 28 கோடி. இவர் திரைப்படங்களில் நடிக்க ரூ. 40 கோடி முதல் ரூ. 75 கோடி வரை சம்பளம் வாங்குவார் என தகவல் தெரிவிக்கின்றனர்.