சீயான் விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வீர தீர சூரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த நிலையில், அப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக பேசப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
மேலும், 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகிறார். இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.
சூர்யா, ஜோதிகா திருமணத்தில் அஜித், ஷாலினி.. வைரலாகும் வீடியோ பாருங்க
புதிய லுக்
இந்த நிலையில், நடிகர் சீயான் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய லுக்கில் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், “Back to the future” என கூறியுள்ளார் விக்ரம். இது படத்திற்காக அவர் வைத்துள்ள கெட்டப் என்றும் கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram