முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2022 இல் கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட
தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர்
தேசபந்து தென்னக்கோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கோட்டாபய
ராஜபக்சவுக்கு வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
எனினும், அவர் முன்னிலையாக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


