முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது.
கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியின் போது செய்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய, குறித்த இருவரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரணிலிடம் வாக்குமூலம்
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வசிக்கும் இடங்களுக்கு சென்று வாக்குமூலங்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.