கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2027 ஆம் கல்வியாண்டில் அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான நடைமுறைகளை உள்ளடக்கிய 25/2026 ஆம் இலக்கச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமைச்சின் அறிவிப்பின்படி, முதலாம் தர சேர்க்கை தொடர்பான பத்திரிகை அறிவித்தல் 2026 ஜூன் 29 அன்று அரசாங்க நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டல்கள்
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இந்தச் சுற்றறிக்கை மற்றும் அது தொடர்பான தகவல்களை அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான moe.gov.lk க்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தச் சுற்றறிக்கையானது, 2027 ஆம் கல்வியாண்டிற்காக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான வழிகாட்டல்களையும் விண்ணப்ப நடைமுறைகளையும் வழங்குகின்றது.
Source: https://ibctamil.com/article/circular-for-admitting-children-to-grade-1-1782397031

