முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்முனை பிரதேச செயலக புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு

புதிய ஆண்டின் அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு
இன்று அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி
ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இன்று
நடை பெற்றது.

நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசியக்
கொடியேற்றப்பட்டு தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தூய்மையான நாடு

மேலும்
நாட்டுக்காக உயிர் நீர்த்த அனைவரையும் நினைவு கூரும் நிகழ்வு 02 நிமிட மௌன
அஞ்சலி செலுத்தப்பட்டது.கல்முனை பிரதேச செயலக பல்வேறு பிரிவுகளை சேரந்த
ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலக புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு | Claean Sri Lanka Today

இறுதியாக நிர்வாக
உத்தியோகத்தர் உரையுடன் “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள்
ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

Clean Sri Lanka (தூய்மையான நாடு) எனும் தொனிப்
பொருளில் நிர்வாக உத்தியோகத்தர் உரையாற்றினார்.

கலந்து கொண்டவர்கள்

மேலும் நிகழ்வில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்
கே.எல் யாஸீன் பாவா நன்றியுரை மேற்கொண்டதுடன் சிற்றூண்டி வைபவத்துடன்
நிகழ்வுகள் நிறைவடைந்தன.

மேலும் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக கணக்காளர்
கே.எம்.எஸ். அமீர் அலி நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல் பிரதேச செயலக
உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி
தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ், கிராம அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜாபீர் , நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் , மேலதிக மாவட்ட
பதிவாளர் எம்.டி.எம் கலீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா
நெளபர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 தேசிய நிகழ்ச்சித்திட்டம்

இதேவேளை, கிளீன் ஶ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன்
இணைந்து, 2025
ஆம் ஆண்டின் அரச சேவைகளை முன்னெடுக்க, கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களும்
இன்று ஆரம்பித்தனர்.

கல்முனை பிரதேச செயலக புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு | Claean Sri Lanka Today

இந்த நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில், பிரதேச
செயலக
முன்றலில் இடம்பெற்றது.

புதுவருடத்தினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும்
நிகழ்வு இன்று (01) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றதுடன் புதுக்குடியிருப்பு
பொலிஸ் நிலையத்திலும் கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு காலை 8
மணிக்கு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு | Claean Sri Lanka Today

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில்
சத்தியப்பிரமாணம் செய்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன் புதிய
ஆண்டுக்கான நடைமுறை அறிக்கைகள் வாசிக்கப்பட்டு 2025 புதிய ஆண்டில் தமது
கடமைகளை பொலிஸார் பொறுப்பெற்றுக் கொண்டனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.